இந்தியா
சிக்கிமில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டம் தொடக்கம்
- இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்த பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவும், குழந்தையைப் பெற்றிருப்பதும் அவசியமாகும்.