இந்தியா

கும்பமேளாவில் மக்கள் இறந்தபோது உ.பி. முதல்வர் ராஜினாமா செய்தாரா?: சித்தராமையா கேள்வி

Published On 2025-06-09 01:22 IST   |   Update On 2025-06-09 01:22:00 IST
  • எந்த அரசாங்கத்தின் கீழும் இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கக்கூடாது.
  • தனிப்பட்ட முறையில் இச்சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

எந்த அரசாங்கத்தின் கீழும் இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த சம்பவம் என்னையும் அரசாங்கத்தையும் காயப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் 5 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறைத் தலைவரும் முதல்வரின் அரசியல் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த வழக்கில் அரசு எந்தத் தவறான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு அவமானம் என்ற கேள்விக்கே இடமில்லை.

கும்பமேளாவின்போது மக்கள் இறந்தபோது உத்தர பிரதேச முதல்வர் ராஜினாமா செய்தாரா? பாஜக மற்றும் ஜேடிஎஸ் உத்தரபிரதேச முதல் மந்திரியை ராஜினாமா செய்ய ஏன் கோரவில்லை? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News