இந்தியா

ரெயில் மந்திரி ரீல் மந்திரியாகியுள்ளார்: ஆதித்யா தாக்கரே கடும் விமர்சனம்

Published On 2025-06-09 18:17 IST   |   Update On 2025-06-09 18:17:00 IST
  • மும்பை புறநகர் ரெயிலில் பயணம் செய்தவர்களில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
  • ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.

தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்தபோது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.

படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விபத்துக்கு மத்திய ரெயில் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

ரெயில் மந்திரி (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் மந்திரியாகியுள்ளார். கடந்த 2 முதல் 3 வருடங்களாக பயங்கரமான பல ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரெயில்வே துறை மற்றும் ரெயில்வே அமைச்சர் மட்டுமு இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரெயில் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் பல முறை வற்புறத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.

இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News