இந்தியா

நடைபயணத்தில் ராகுலுடன் ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணம் -ஆதித்யா தாக்கரே பங்கேற்பு

Published On 2022-11-11 12:47 GMT   |   Update On 2022-11-11 12:47 GMT
  • மகாராஷ்டிராவின் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார்.
  • ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

மும்பை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் மகாராஷ்டிரா சென்றார்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்கிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அவர் ராகுலுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சிவசேனா தொண்டர்கள் கோஷமெழுப்பினர்.

Tags:    

Similar News