இந்தியா

'இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' - ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு சசி தரூர் கண்டனம்

Published On 2025-08-24 11:29 IST   |   Update On 2025-08-24 11:29:00 IST
  • ரணில் விக்ரமசிங்கேவை இலங்கை போலீசார் கைது செய்தனர்.
  • அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை, நாட்டின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்தனர்.

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, போலீசார் கைது செய்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு 76 வயதாகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோதபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியபோது, ரணில் விக்ரமசிங்கே, அதிபராக பதவி ஏற்றார். 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபராக இருந்தார். அவர் 6 முறை இலங்கை பிரதமராக இருந்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சசி தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி இருப்பது கவலை அளிக்கிறது. தற்போதைய இலங்கை அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, அவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்ஷே கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ஷே, "இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், சிறிய தவறுக்காக சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News