இந்தியா
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பள்ளி சென்ற மாணவி கடத்தல்
- மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.
- மாணவி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீகாகுளம்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் பட்டப்பகலில் பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்து இன்று காலையில் வழக்கம்போல் மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.
இதைப் பார்த்த சக மாணவிகள், அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். மாணவி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.