இந்தியா

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு

Published On 2024-02-19 11:04 GMT   |   Update On 2024-02-19 13:44 GMT
  • தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்குச்சீட்டுகளில் x என குறியிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்றே (பிப் 18) சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்தார். அதே சமயம் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், "சண்டிகரில் நடைபெறும் குதிரைப்பேரம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்" என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் ,மீண்டும் எண்ணப்பட்டு அதன் அடிப்படையில் மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News