சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: முக்கிய குற்றவாளி உன்னிகிருஷ்ணன் கைது
- எந்த குளறுபடியும் நிகழவில்லை என்று தேவசம் போர்டு தெரிவித்தது.
- அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியால் கடந்த வாரம் சட்டமன்றம் தொடர்ந்து முடங்கியது.
இந்நிலையில் தனது செலவில் தங்கக் திருட்டு முலாம் பூசுவதற்காக எடுத்துச்சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி என்ற தொழிலதிபர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறப்பு விசாரணை குழுவால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
நேற்று அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து அவரின் கைது நடந்துள்ளனது.
திருவனந்தபுர பொது மருத்துவமனையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று மதியம் ரன்னி நீதிமன்றத்தில் ஆவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் அவகாசம் கோரும் என்று தெரிகிறது.