இந்தியா

விரைவில் இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

Published On 2025-08-07 16:45 IST   |   Update On 2025-08-07 16:45:00 IST
  • ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • புதின் வருகைக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பை ஏற்று இந்த முடிவு எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதின் வருகைக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்"

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கடும் வரிவிதிப்பை மேற்கொண்டுள்ள நிலையில் ரஷிய அதிபர் இந்தியா வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

Tags:    

Similar News