கிலோ ரூ.40,000.. இரவு விருந்தில் புதினுக்கு பரிமாறப்பட்ட 'குச்சி காளான்' - அப்படி என்ன சிறப்பு?
- இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
- சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.
இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.
இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.
இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.
குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.
பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.
இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.
குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.