இந்தியா
பீகாரில் பரபரப்பு: அரசியலை விட்டு விலகுவதாக லாலு மகள் அறிவிப்பு
- பீகார் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட மகாகட்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்தது.
- அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என லாலு மகள் பதிவிட்டுள்ளார்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.
இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே லாலு மகளின் அறிவிப்பால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.