இந்தியா

கேரளாவில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்: 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-05-26 15:46 IST   |   Update On 2025-05-26 15:46:00 IST
  • கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கனமழை பெய்து வருகிறது.
  • கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News