இந்தியா

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் - முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2023-02-17 18:07 GMT   |   Update On 2023-02-17 18:07 GMT
  • கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
  • ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது, கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் கோயில்கள் மற்றும் மடங்கள் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கர்நாடாகவில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News