இந்தியா

2024ல் பிரதமர் மோடி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் வருவார்- ராஜ்நாத் சிங்

Published On 2023-10-28 15:22 GMT   |   Update On 2023-10-28 15:22 GMT
  • வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
  • வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

2024ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது பாராளுமன்றத் தொகுதியான லக்னோவுக்கு ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக வந்தார்.

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர், வரும் தேர்தலில் எதிர்கட்சியான "இந்தியா" கூட்டணி முன்வைக்கும் சவால் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அவர் மீண்டும் வருவார் என்பதை நான் மட்டுமல்ல, பல அரசியல் பார்வையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மகரிஷி வால்மீகியின் ராமர் ஒரு அரசர் மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர்... யுக் புருஷ் மற்றும் ஒரு அவதாரம் என்பதை முழு உலகமும் அறிந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

எல்லா பாரதவாசிகளும், உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கட்டும், ராமாயணத்தில் மகரிஷி வால்மீகியால் செதுக்கப்பட்டதைப் போல ராமரை மரியதா புருஷோத்தராகப் பார்க்கவும்.

மேலும், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News