வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை வெற்றி..!
- வந்தே பாரத் ரெயில் வரவேற்று பெற்றதால், ஸ்லீப்பர் ரெயில் விட திட்டம்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய ரெயில்வேத்துறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக அதிவேக ரெயிலான வந்தே பாரத்தை அறிமுகம் செய்தது. குறிப்பிட்ட நிறுத்தங்களை கொண்ட இந்த ரெயிலால், பயணிகள் நேரம் மிச்சமானது. முதலில் 8 பெட்டிகளாக இயக்கப்பட்டு, படிப்படியாக பல்வேறு வழித் தடங்களில் 24 பெட்டிகள் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரெயில்களுக்கு பயணிகள் இடையே அமோக வரவேற்பு ஏற்பட்டதால், ஸ்லீப்பர் ரெயிலை விட ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.
தற்போது வெர்சன் 2 என அழைக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை, பயணிகளுக்கு இணையாக எடையுடனும், எடை இல்லாமலும் 180 கி.மீ. வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா டிவிசனில் மேற்கு மத்திய ரெயில்வேஸ் இந்த சோதனையை செய்துள்ளது. ரோஹல்குர்த்- இந்திராகார்- கோட்டா பிரிவில் 100 கி.மீ. இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.