இந்தியா

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்

Published On 2023-06-29 13:39 IST   |   Update On 2023-06-29 13:44:00 IST
  • நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்.
  • விஷ்ணுபூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்த நிறுத்தப்பட்டது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

அதன்படி, ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News