இந்தியா

கேரளாவில் உம்மன்சாண்டி போன்ற தனிநபர்களின் பாரம்பரியம் உள்ளது - ராகுல் காந்தி

Published On 2025-07-18 14:45 IST   |   Update On 2025-07-18 14:45:00 IST
  • அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி.
  • உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.

அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-

அரசியலில் நான் கண்ட மிகப்பெரிய மனிதாபிமானி உம்மன்சாண்டி. ஜோடா யாத்திரையின் போது மருத்துவர்கள் உம்மன் சாண்டியிடம் நடக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். ஆனால் அதை கேட்காமல் அவர் பயணத்தை தொடர்ந்தார்.

உம்மன்சாண்டி வெறும் ஒரு நபர் மட்டுமல்ல. அவர் கேரள அரசியலின் உருவகம். கேரளாவில் இது போன்ற தனி நபர்களின் பாரம்பரியம் உள்ளது. உம்மன்சாண்டி போன்ற பலரை வளர்ப்பதே என்னுடைய முயற்சி. உம்மன்சாண்டி மீது ஒரு குற்றவியல் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்திலும் அவர் யாரையும் குறை கூறவில்லை.

உம்மன்சாண்டி எனது குரு. குரு என்றால் செயலின் மூலம் வழி காட்டுபவர். எனக்கு மட்டுமல்ல, கேரளாவில் பலருக்கும் அவர் தான் குரு. அவர் தனது செயலின் மூலம் வழிகாட்டினார். உம்மன்சாண்டியின் பாதையை பின்பற்று பவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Tags:    

Similar News