இந்தியா
34-வது நினைவு தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி வீர் பூமியில் ராஜீவ் காந்தி நினைவு மண்டபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.