இந்தியா
அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் 300 பூனைகளை வளர்த்த பெண்ணுக்கு நோட்டீஸ்
- கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது.
- பெண் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புனே:
புனே மாவட்டம், கடப்சரில் 'மார்வெல் பவுண்டி' என்ற வீட்டுவசதி சங்க குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் ஏராளமான பூனைகளை வளர்த்து வருவதாகவும், இதனால் அங்கு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கால்நடை அதிகாரி தலைமையிலான குழுவினர், போலீசாருடன் இணைந்து அந்த குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் தனது வீட்டில் 300 பூனைகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குடியிருப்பில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து அந்தப்பூனைகளை பொருத்தமான வேறு இடத்துக்கு மாற்றுமாறு அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கடப்சர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.