இந்தியா

ஆக்கப்பூர்வமான பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி

Published On 2024-11-25 10:44 IST   |   Update On 2024-11-25 10:46:00 IST
  • நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை.
  • எம்.பி.க்கள. தங்கள் தொகுதி பயனடையும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

நடப்பாண்டின் கடைசி கூட்டத்தொடர் இது. ஆக்கப்பூர்வமான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக காத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை. எம்.பி.க்கள. தங்கள் தொகுதி பயனடையும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. அனைவரும் நாடாளுமன்ற கண்ணியத்தை காக்க வேண்டும். அவைகளில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதானி மீதான அமெரிக்காவின் புகார் உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News