100 ஆண்டுகளாக தேச சேவையில் அயராது ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்.. மனதின் குரலில் புகழ்ந்த பிரதமர் மோடி!
- தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம்.
- தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அவர் இன்று 126-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழா ஆகும். காந்தி எப்போதும் சுதேசியை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தினார். அவற்றில் காதி முதன்மையானது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் வசீகரம் மங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் காதி மீதான நாட்டு மக்களின்ஈர்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் காதி விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காதி பொருட்களை வாங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
காதியைப் போலவே, நமது கைத்தறி மற்றும் கை வினைத் துறையும் குறிப்பி டத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டுவிட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர்.மேலும் 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கினர்.
சத் பூஜையை யுனெஸ்கோ வின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்திய அரசு பாடுபடுகிறது. சத் பூஜை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படும்போது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் அதன் மகத்துவத்தையும் தெய்வீ கத்தையும் அனுபவிக்க முடியும்.
இந்த விஜயதசமி மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த நூற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கம ளிக்கிறது.
தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம். ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக அயராது மற்றும் தடையின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளது.
இதனால்தான் நாட்டில் எங்காவது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முதலில் அங்கு செல்கிறார்கள்.
தேசம் முதலில் என்ற இந்த உணர்வு எப்போதும் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும் முதன்மையானது.
தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாட்களில், பண்டி கைகளும் கொண்டாட்டங்களும் தொடர்ச்சியாக வர உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் நிறைய பொருட் களை வாங்குகிறோம்.
இந்த முறை ஜி.எஸ்.டி சீர் திருத்தங்களுடன் பொருட்களை வாங்க உள்ளீர்கள். இந்த பண்டிகையை உள்நாட்டு தயாரிப்புகளுடன் மட்டுமே கொண்டாட நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.