இந்தியா

கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி முடிவு!

Published On 2025-10-17 16:05 IST   |   Update On 2025-10-17 16:05:00 IST
  • ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார்.
  • 2024-ல் குஜ​ராத்​தின் சர் க்ரீக்​கில் ராணுவத்​தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.

அந்த வகையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நமது ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பான வெற்றியைக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2014-ல் லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்துக்கு சென்ற அவர், அங்கு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.

2015-ல், 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் நமது வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள டோக்ராய் போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாடத்தில் பிரதமர் பங்கேற்றார். 2024-ல் குஜராத்தின் சர் க்ரீக்கில் ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார். 

Tags:    

Similar News