இந்தியா

ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2024-01-31 05:58 GMT   |   Update On 2024-01-31 06:52 GMT
  • கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

* இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும்.

* சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும்.

* எது தேசம் எனது மண் யாத்திரை மூலம் பல்வேறு கிராமங்களில் மண் எடுக்கப்பட்டு அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டது.

* பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

* கடந்த ஆண்டும் நாட்டின் வரலாற்றின் வரலாற்ற சிறப்புமிக்க வருடம்.

* நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசியது.

* சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது.

* ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்தியது.

* பாரா ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா குவித்தது.

* கடந்தாண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

* சீர்திருத்தம், செயல்பாடு போன்றவற்றில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

* கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

* அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

* ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

* டிஜிட்டல் துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது.

* கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

* ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம்.

* கதர் மற்றும் கிராமப்பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

* வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News