இந்தியா

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்: பிரசாந்த் கிஷோர் காட்டம்

Published On 2025-09-21 20:28 IST   |   Update On 2025-09-21 20:28:00 IST
  • ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
  • பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.

பாட்னா:

பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.

நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.

எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.

Tags:    

Similar News