இந்தியா

சீனா குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது: காங்கிரஸ் விமர்சனம்

Published On 2024-04-11 12:21 GMT   |   Update On 2024-04-11 12:21 GMT
  • எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன்.
  • அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.

இந்தியா- சீனா இடையிலான பிரச்சனை குறித்த பிரதமர் மோடியின் பதில் பயனற்றது, பலவீனமானது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

சீனாவுக்கு ஒரு வலிமையான கருத்தை அனுப்புவதற்கு பிரதமர் மோடிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவருடைய பயனற்ற மற்றும் பலவீனமான பதில், இந்திய பகுதிகள் தங்களுக்கானது எனக் கூறி வரும் சீனாவிற்கு மேலும் தையரித்தை கொடுப்பதை போல் இருக்கிறது.

சீனா பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் ரியாக்சன் அவமானகரமானது மட்டும் அல்ல. மேலும், நமது எல்லையை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த நம்முடைய தியாகிகளை இழிவுப்படுத்துவதாகும்.

சீனாவோடு உள்ள எல்லையை பாதுகாப்பதில் இருந்து தோல்வியடைந்த நிலையில், ஒரு அங்குல நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என டெலிவிசனில் 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பேசும்போது மறைத்ததற்காக 140 கோடி மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,

'நியூஸ்வீக்' வாராந்திர செய்தி இதழுக்கு பேட்டியளித்த பிரதமா் மோடி, இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து பேசியுள்ளாா். இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

எல்லைகளில் நீண்ட காலமாக நிலவும் சூழலுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டியது அவசியமென கருதுகிறேன். அப்போதுதான், இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரணத் தன்மையை நாம் பின்தள்ள முடியும்.

இந்தியா- சீனா இடையிலான அமைதியான மற்றும் ஸ்திரமான உறவுகள், இரு நாடுகளுக்கும் இப்பிராந்தியத்துக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் முக்கியமானது. தூதரகம், ராணுவ ரீதியில் நோ்மறையான, ஆக்கப்பூா்வமான இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என நம்புகிறேன்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News