இந்தியா

பிரதமர் மோடி நாளை மேற்கு வங்கம் செல்கிறார்: 1010 கோடி ரூபாய் கியாஸ் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2025-05-28 21:33 IST   |   Update On 2025-05-28 21:33:00 IST
  • 2.5 லட்சம் வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம்.
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக மேற்கு வங்கம் செல்கிறார்.

பிரதமர் மோடி நாளை மேற்கு வங்க மாநிலம் செல்கிறார். அங்கு 1010 கோடி ரூபாயிலான கியாஸ் வினியோகம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் அலிபூர்துவாரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக மேற்கு வங்க மாநிலம் செல்கிறார். இன்னும் ஒரு வருடத்திற்குள் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் 1010 கோடி ரூபாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். 2.5 லட்சம்திற்கு அதிகமாக வீடுகளக்கும், 100-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் எரிவாயு வழங்குவதுதான் இந்த கியாஸ் வினியோகம் திட்டம் ஆகும்.

அலிபூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளும் அரசு நிகழ்ச்சியாகும். அதன்பின் வடக்கு பெங்கால் மாவட்டங்களை ஒட்டிய பகுதியில் பேரணி நடைபெறும் என மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

நாளை சிக்கில் மாநிலம் செல்கிறார். அங்கிருந்து மதியம் ஒரு மணியளவில் அலிபூர்துவார் செல்ல இருப்பதாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News