இந்தியா
பிரதமர் மோடி, அரவிந்தர்
அரவிந்தர் பிறந்த நாள்- புதுச்சேரி நிகழ்ச்சியில் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
- அரவிந்தர் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிடுகிறார்
- புதுச்சேரி கம்பன் கலை சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
75-வது விடுதலை கொண்டாட்ட அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக கம்பன் கலை சங்கம் சார்பில் புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அரவிந்தருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை வெளியிட்டு அவர் உரை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.