இந்தியா

பிரதமர் மோடி

ஜி20 அமைப்பில் தலைமைப் பொறுப்பு - வாழ்த்திய உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

Published On 2022-12-05 00:57 GMT   |   Update On 2022-12-05 07:15 GMT
  • ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
  • தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி:

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.

இதற்கிடையே, ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றி. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி20 தலைமை பதவிக்கு பலமாக இருக்கும். ஒரு சிறந்த உலகை படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய கவுன்சில் தலைவரான சார்லஸ் மைக்கேலுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News