இந்தியா

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம் வழங்குகிறார் பிரதமர் மோடி

Published On 2023-07-21 23:52 IST   |   Update On 2023-07-21 23:52:00 IST
  • ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி நாளை 44 இடங்களில் நடைபெறுகிறது.
  • நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 70 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி நாளை 44 இடங்களில் நடைபெறுகிறது. ஜூலை 22ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் உள்பட பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.

Tags:    

Similar News