என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rozgar mela"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி நாளை 45 இடங்களில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

    நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார்.

    இதற்கான நிகழ்ச்சி நாளை 45 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

    இத்திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

    நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், கிராமின் தக் சேவகர்கள், பணியிட ஆய்வாளர் உள்பட பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.

    • தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
    • சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    சென்னை:

    ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேளா என்ற புதிய திட்டத்தின் மூலம் இன்று 6-வது கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்தியா முழுவதும் 43 இடங்களில் இந்த திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    திருச்சியில் நடந்த விழாவில் 238 பேருக்கு மத்திய மந்திரி எல்.முருகன் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினார். 11 பொதுத்துறை வங்கிகள், வருவாய்த்துறை, பாதுகாப்பு அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், ரெயில்வே, தபால்துறை, சுங்கம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகார துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    • ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி நாளை 44 இடங்களில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

    நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 70 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார்.

    இந்நிகழ்ச்சி நாளை 44 இடங்களில் நடைபெறுகிறது. ஜூலை 22ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.

    நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், வருவாய்த் துறை, நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் உள்பட பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.

    • 2030-க்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பங்களிக்கும்
    • இந்த 10 ஆண்டுகளில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்

    பிரதமர் மோடி இன்று 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர்களிடம் காணொலி மூலம் வழங்கிய அவர் பின்னர் பேசியதாவது:-

    உள்ளூர் வேலைவாய்ப்பு, தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும், அரசுகள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தப்படும்.

    இதே நாளில் நாம் ஜன் தன் யோஜனா திட்டத்தை 9 வருடத்திற்கு முன் கொண்டு வந்தோம். நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. உணவில் இருந்து மருந்தகம், விண்வெளியில் இருந்து ஸ்டார்ட்அப்ஸ் என அனைத்து துறைகளும் எந்தவொரு பொருளாதாரம் வளர்வதற்கு அவசியமானது.

    2030-க்குள் சுற்றுலாத் துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பங்களிக்கும். இதில் 13 முதல் 14 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

    ஆட்டோமொபைல்ஸ், மருத்துவ துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் காலங்களில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    இந்த 10 ஆண்டுகளில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். நான் இந்த உறுதியை கொடுக்கும்போது, அதற்கான முழு பொறுப்பும் எனக்கு உண்டு. அதை நான் செய்வேன். நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளைத் திறக்க துணை ராணுவப் படைகளுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ரெயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் முகாம்கள் (ரோஜ்கர் மேளா) பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார்.

    ×