இந்தியா

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா?- பிரதமர் மோடி

Published On 2024-04-10 14:30 GMT   |   Update On 2024-04-10 14:30 GMT
  • நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
  • மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும்.

பிரதமர் மோடி இன்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராம்டெக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், அதன்பின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புக்கு ஆபத்து என பொய்த் தகவலை பரப்பி வருகின்றனர். நான் அரசியல் வந்தததில் இருந்து, ஒரு தேர்தலில் கூட இந்த விசயத்தை அவர்கள் கூறவில்லை. எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா?. சாதாரண ஏழை நபரின் மகன் பிரதமரான நிலையில், அவர்கள் ஜனநாயகம் ஆபத்து என பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

நாட்டு மக்களை இந்தியா கூட்டணி பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா கூட்டணியில் உள்ளவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்கள் இந்து தர்மத்துடைய சக்தியை ஒழிக்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இந்தியா கூட்டணியை ஒரு தொகுதியில் கூட நீங்கள் வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா உங்களிடம் வந்துள்ளது. உங்களது ஒவ்வொரு வாக்குகளும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்கு மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளை தண்டிப்பதற்கும்தான்.

அவர்கள் என்னுடைய மறைந்த தாயார் அல்லது தந்தை குறித்து அவதூறு செய்யும்போது, இனிமேல் மோடி ஆட்சிதான். வாக்கு எந்திரம் (EVM) குறித்து அவர்கள் கேள்வி எழுப்பும்போது இனிமேல் மோடி ஆட்சிதான்.

Tags:    

Similar News