இந்தியா

சுதந்திர தின உரைக்கு யோசனை கூறுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

Published On 2025-08-02 05:31 IST   |   Update On 2025-08-02 05:31:00 IST
  • நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
  • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

புதுடெல்லி:

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி நான் நாட்டு மக்களிடம் இருந்து யோசனைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருப்பொருள்கள் அல்லது விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய எண்ணங்களை 'நமோ' செயலி, எனது அரசு 'மைஜி–ஓவி' தளங்களில் பகிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News