இந்தியா

உலக சுற்றுச்சூழல் தினம்: சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி

Published On 2025-06-05 13:23 IST   |   Update On 2025-06-05 13:23:00 IST
  • குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர்.
  • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

உலகம் முழுக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் அவற்றை இன்று நட்டு வைத்துள்ளேன் இவை, நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்மையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News