இந்தியா

இனக்கலவரத்திற்கு பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல்

Published On 2025-08-31 09:20 IST   |   Update On 2025-08-31 09:20:00 IST
  • மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
  • மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே கலவரத்தால் பெருதும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை செல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

உலகம் முழுவதும் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களைச் பார்க்க நேரமோ, ஆர்வமோ இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News