பிரதமர் மோடிதான் ரோல் மாடல்: நடிகர் பவன் கல்யாண் பேச்சு
- உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி.
- மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார்.
திருப்பதி:
ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஐதராபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி. முன்பு 3 முறை குஜராத் முதல்-அமைச்சராக இருந்து, இப்போது பிரதமராக இருக்கிறார்.
குஜராத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய விதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கு மாநிலத் தலைவர்கள் முன்மாதிரியாகக் காண வேண்டும்.
மோடி எனக்கு மிகவும் பிடித்த பிரதமர், நான் அவரை மிகவும் மதிக்கிறேன், அவர் மிகவும் திறமையான தலைவர். வலுவான தலைமைத்துவம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் நாட்டை வழிநடத்த வந்துள்ளார்.
மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். பிரதமர் மோடி தான் என்னுடைய ரோல் மாடல்.
இவ்வாறு அவர் பேசினார்.