இந்தியா

பிரதமர் மோடி, தனது சாதியை பற்றி பொய் சொல்கிறார்- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2024-02-08 09:55 GMT   |   Update On 2024-02-08 09:55 GMT
  • பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர்.
  • சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புவனேஸ்வர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். அவரது யாத்திரை, தற்போது ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்து வருகிறது. இன்று யாத்திரையில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் மோடி, தனது சாதி பற்றி பொய் சொல்கிறார். அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் அல்ல. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். அந்த சமூகத்திற்கு 2000-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் அடையாளத்தை பா.ஜனதா வழங்கியது. பிரதமர் மோடி பொது பிரிவில் பிறந்தவர். பொது சாதியில் பிறந்தவர் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி தனது யாத்திரையில் பிரதமர் மோடி, மத்திய அரசையும் விமர்சனம் செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சாதி குறித்து ராகுல் காந்தி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News