வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள், வாக்கு வங்கி ஆதாயத்திற்காக என பாஜக கடும் விமர்சனம்
- வக்பு வாரிய சட்ட திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது.
பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிதுள்ளார். இதனால் வக்பு திருத்த மசோதா சட்டமாகியுள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில், வாக்கு வங்கி நலனுக்காக வழக்குகள் என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-
வாக்கு வங்கியை தூண்டிவிட்டு, நாட்டில் கலவரம் போன்ற சூழ்நிலைய உருவாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்குதான் இந்த வழக்குள். வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்து ஆதாயம் அடைந்து வரும் நில மாஃபியாக்கள் மட்டுமே புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். குறைந்த அளவிலான பொதுநல மனுக்கள் அதிக வாக்கு வங்கி நலனுக்காக வழக்குகள் போல் தெரிகிறது.
புதிய சட்டம் சமூக நீதியையும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசியலமைப்பின் பயன்பாட்டையும் உறுதி செய்யும். இது இந்து-முஸ்லிம் பிரச்சனை அல்ல. ஏராளமான முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைக்கள் கூட இந்த சட்ட திருத்தத்தை வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்தார்.