இந்தியா

நடுவானில் சீட்டு விளையாடிய விமான பயணிகள் - வீடியோ வைரல்

Published On 2025-06-19 08:35 IST   |   Update On 2025-06-19 08:35:00 IST
  • விமான பயணத்தில் இவ்வாறு நடந்து கொண்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
  • விமான நிறுவனங்கள் தங்களுடைய குறைபாடுகளை சரி செய்ய சொல்வது சரி...

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி 241 பேர் பலியான விவகாரம் நாடே சோகத்திற்கு உள்ளாக்கியது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சேவைகளை விமான நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் பலமாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் பறக்கும் விமானத்தில் பயணிகள் சிலர் சீட்டு விளையாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் விமானத்தின் நடுவே பயணிகள் மற்றும் சிப்பந்திகள் கடந்து செல்வதற்கான நடைபாதையில் பயணிகள் சிலர் மேஜை போன்று அமைத்து சீட்டு விளையாடினர்.

விமான பயணத்தில் இவ்வாறு நடந்து கொண்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விமான நிறுவனங்கள் தங்களுடைய குறைபாடுகளை சரி செய்ய சொல்வது சரி... ஆனால் பயணிகளும் விமான பயணத்தின்போது தங்களுடைய பொது அறிவை பயன்படுத்தி சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என கருத்து பதிவிட்டனர்.



Tags:    

Similar News