இந்தியா

நடுவானில் வாக்குவாதம்.. கோவா-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் ஊழியரை தாக்கிய பயணி

Update: 2023-05-30 15:21 GMT
  • விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
  • இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு ஊழியரை தாக்கி உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். எனவே, அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது,

இவ்வாறு அவர் கூறினார்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக விதிகளின் படி, அத்துமீறி நடக்கும் விமானப் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம்.

Tags:    

Similar News