null
'ஆபரேஷன் சிந்தூர்' - பெயர்க்காரணம் என்ன?
- 'சிந்தூர்' என்றால் குங்குமம்.
- மணமகளின் நெற்றியில் ஒரு துளி குங்குமத்தை இடுவது அவளுடைய கணவன் அவள் வாழ்வில் இருப்பதை குறிக்கும்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தும் தாக்குதலுக்கு ஆபரேஷன் 'சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஒப்புதலோடு நடத்தப்படும் இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காமில் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதியைப் பெற்றுத் தரும் விதமாக இந்த பதிலடி தாக்குதல் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்றவாறு 'ஆபரேஷன் சிந்தூர்' என்பதை சித்தரிக்கும் ஒரு படத்தை இந்திய ராணுவம் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'சிந்தூர்' என்றால் குங்குமம். குங்குமம் என்பது திருமணமான இந்து பெண்களின் அடையாளமாகும்.
பஹல்காம் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் மனிதாபிமான படுத்துவதோடு உயிர்களை இழக்கவிடாமல் தடுப்பதும் ஆபரேஷன் சிந்தூரின் சிறப்பம்சமாகும்.
இது இந்தியா மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்பட்ட உயிரிழப்புகளுக்கு பழிவாங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.
மணமகளின் நெற்றியில் ஒரு துளி குங்குமத்தை இடுவது அவளுடைய கணவன் அவள் வாழ்வில் இருப்பதை குறிக்கும். இது அந்த பெண் திருமணமானவள் என்பதையும், அவளுடைய கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது.
திருமணமான இந்து பெண்களின் வாழ்க்கையில் இது ஒரு பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சில மரபுகளில் திருமண பக்தியின் உருவகமாக கருதப்படும் பார்வதி தேவியுடன் சிந்தூர் தொடர்புடையது. சிந்தூர் அல்லது குங்குமம் என்பது ஒரு போர் வீரனின் அடையாளமாகும்.
இந்தியாவின் மனிதாபிமானம் மற்றும் வீரத்தையும் ஆபரேஷன் சிந்தூர் குறிக்கிறது