null
ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம்
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
- ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இரவு முழுவதும் துல்லியமாக தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 நிலைகளை அழித்துள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' பதிலடியை பஹல்காமில் உள்ள சுற்றுலாப் பயணிகள் உற்சாக முழக்கமிட்டு கொண்டாடி வருகின்றனர்.