இந்தியா

பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு

Published On 2025-05-09 08:53 IST   |   Update On 2025-05-09 08:53:00 IST
  • பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
  • உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

நேற்று இரவு பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லைகள் (IB) வழியாக பல்வேறு இடங்களுக்கு ட்ரோன்களை செலுத்த முயன்றபோது, இந்திய ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கையால் உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Tags:    

Similar News