இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கப்பட்ட புதிய வீடியோவை வெளியிட்ட ராணுவம்

Published On 2025-09-04 03:15 IST   |   Update On 2025-09-04 03:15:00 IST
  • பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.
  • 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 உயிர்களை பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது.

இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன.

1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக பாகிஸ்தானுடன் மோதியது இதுவே முதல் முறை.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் புதிய வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்படுவது பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News