இந்தியா

ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

மழைக்கால கூட்டத்தொடர் - சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

Published On 2022-07-16 19:19 GMT   |   Update On 2022-07-16 19:19 GMT
  • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
  • இத்தொடரில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெறுகிறது.

புதுடெல்ல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படியும், பிரச்சினைகளை விவாதித்து முடிவு செய்யலாம் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், அக்னிபத், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News