இந்தியா
ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
2023-06-03 07:51 GMT
ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மம்தா பானர்ஜி ஆய்வு
2023-06-03 07:15 GMT
உதயநிதி தலைமையிலான தமிழக குழு ஒடிசா சென்றடைந்தது. விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார்கள்
2023-06-03 06:23 GMT
ஒடிசா முதல்வர் பட்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
2023-06-03 05:53 GMT
தற்போது மீட்புப்பணி நிறைவந்து சீரமைப்பு வேலை நடைபெற்று வருவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
2023-06-03 05:49 GMT
238 பேர் உயிரிழந்ததாகவும், 600 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
2023-06-03 05:42 GMT
பிரதமர் மோடி ஒடிசா விரைகிறார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.
2023-06-03 05:40 GMT
ராணுவத்தை தொடர்ந்து விமானப்படையும் மீட்புப்பணியில் களம் இறங்கியுள்ளது.
2023-06-03 05:37 GMT
ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
2023-06-03 05:23 GMT
ஒடிசா ரெயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன் என இங்கிலாந்தில் இருந்து விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
2023-06-03 05:19 GMT
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தைவான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்