ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
சென்னையில் இருந்து மருத்துவக்குழு ஒடிசா விரைந்துள்ளது
விபத்தில் காயம் அடைந்தவர்களை ஒடிசாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்து ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு.
ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் ராணுவம்
மீட்புப் பணியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காயம் அடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்கவும், மருத்துவ உதவி அளிக்கவும் உதவி செய்து வருகிறார்கள். ராணுவ மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் குழுவும் சென்றுள்ளது. பல இடங்களில் இருந்து விரைவாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைவாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது என ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு துரதிருஷ்டவசமான விபத்து. ரெயில்வே துறை விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும். விபத்து குறித்து யாரும் பேச தயாராக இல்லை என என்.சி.பி. தலைவர் அஜித் பவார் விமர்சனம்
ரெயில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று மாலை 6 மணி 30 நிமிடத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 1350 பேர் பயணிக்கலாம்.
ஒடிசா புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழக அதிகாரிகள் குழு ஒடிசா புறப்பட்டது. நாங்கள் விவரங்களை சேகரிக்க செல்கிறோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே ஒடிசா முதல்வரிடம் பேசியுள்ளார். ரெயில் விபத்தில் காயம் அடைந்த தமிழர்களின் சிகிச்சைக்காக தமிழகத்தில் மருத்துவனையில் வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்றார் உதயநிதி ஸ்டாலின்.
ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக தென்கிழக்கு ரெயில்வே அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது.