ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் ,
அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும்,இந்த கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேபாள பிரதமர் தஹால் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்
பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900 பேர் காயம் அடைந்துள்ளனர்
அரசு சார்பில் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.
நிலைமையை சீராக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.ரெயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள்: 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு. இதுதவிர 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ரெயில் விபத்து காரணமாக 43 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் இருந்து மட்டும் 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. ரெயில் விபத்தில் காயமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநிலத்துக்கான தலைமை செயலாளர் பிகே ஜெனா அறிவிப்பு.