இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-06-03 01:17 GMT   |   Update On 2023-06-04 13:14 GMT
  • இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
  • சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-

விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.

2023-06-04 13:08 GMT

ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

2023-06-04 13:06 GMT

ஒடிசா சென்ற தமிழக குழுவினர் இன்று சென்னை திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றார்.

8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

2023-06-04 13:05 GMT

இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா, ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தரவு மாவட்ட கலெக்டரால் சரிபார்க்கப்பட்டது என்றும், சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று முதலில் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இறப்பு எண்ணிக்கை 275 ஆக திருத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார். 

2023-06-04 05:46 GMT

பிரதமர் மோடியுடன் ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அப்போது, தற்போதைய நிலவரம் குறித்து விவரித்ததாக தெரிகிறது.

2023-06-04 04:15 GMT
ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- அமைச்சர் அஸ்வின்
2023-06-04 04:14 GMT

புதன்கிழமை காலைக்குள் அனைத்து சீரமைப்பு பணிகளையும் முடிக்க திட்டம்- மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்

2023-06-04 03:55 GMT

பலி எண்ணிக்கை 294 ஆக உயர்வு

2023-06-03 16:12 GMT

தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, காயம் அடையவில்லை.

உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாதவர்களின் புகைப்படம் ரெயில்வே இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2023-06-03 15:12 GMT

புவனேஸ்வரில் இருந்து வெளியேறுவதற்கும், அங்கே செல்வதற்குமான விமானக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

2023-06-03 14:57 GMT

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News