ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
ஒடிசா சென்றுள்ள தமிழக குழு அங்கேயே தங்கியிருக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு. தொலைந்து போனவர்களை அங்கேயே தங்கியிருந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்
பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது
ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு வருகிறார் பிரதமர் மோடி
ஒடிசா ரெயில் விபத்து அதிக வலியை ஏற்படுத்துவதாகவும், வேதனை அளிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுவரை 70 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளது
விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட மம்தா பானர்ஜி ‘‘ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.
பலி எண்ணிக்கை 261 ஆக அதிரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி ஒடிசா புறப்பட்டார்