இந்தியா

பணி நியமனங்களில் சலுகை காட்டுவதில்லையா?: பிரதமர் மோடிக்கு கபில் சிபல் பதிலடி

Published On 2023-05-18 03:31 GMT   |   Update On 2023-05-18 03:31 GMT
  • அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
  • விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

புதுடெல்லி :

பிரதமர் மோடி நேற்று முன்தினம் 'ரோஜ்கார் மேளா'வில் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி வழியாக பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசினார். அப்போது அவர், "அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆள்தேர்வில் ஊழலுக்கும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுபற்றி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஆள் எடுப்பு செயல்முறையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதும் முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறி இருக்கிறார். பாராட்டுகள். ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக, தற்காலிக ஆசிரியர்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்டவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதுதான் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கான ஒளிரும் எடுத்துக்காட்டு. பிரதமர் அவர்களே, என்ன சொல்கிறீர்கள்" என கூறி உள்ளார்.

Tags:    

Similar News